Thursday, 10 December 2015

சென்னை மழை




சென்னை மழை

முதுவேனிற்காலம் தொடங்கி முன்பனி காலத்திலும்
முடியாமல் தொடர்கிறது இந்த சென்னை மழை !
கோடை மழையில்  குளிர்ந்த மனது - இந்த
குளிர்  மழையை ரசிக்க மறுக்கிறது !

கோடையில் மழை பெய்தால் குளிரும் பூமி - மண்
வாடை தரும் கிருக்கத்தால்  மகிழும் நெஞ்சம் !
மதராச  பட்டினத்தில் பெய்த மழை - மானுட
இராஜ்ஜியத்தை விழித்தெழ வாய்த்த மாயம்;

மழை செய்த மாயமென்ன
மனித நேயமும், சகோதரத்துவமும்
அங்கிங்கெனாத படி எங்கும் நிறைந்திருக்கிறது
இந்த சிங்கார சென்னையில் !

கடைக்கோடி தமிழனின் கண்ணீர்
துடைக்க கோடியில் குவிகிறது கொடை !
அமர்ந்த கரையில் இருப்பவன் நனைந்ததால்
அமெரிக்காவில் இருப்பவன் வருந்துகிறான்:

வந்தாரை  வையத்துள் வாழ்வாங்கு
வாழ வைக்கும் விந்தையான சென்னை !!!
உன்னை கலைத்து போடிருக்கிறது - மழை
உன் கட்டமைப்பு சரியில்லை என்று ??

பாடம் கற்பித்து அடிப்படையே மாற்றியமைத்து
பட்டம் பூச்சிகளை பறக்க விட முயல்கிறது;
தமிழனது தலை நகரமான உன்
தலைகனத்தை அழித்து விழிக்கச் சொல்கிறது;

பாரினில் கப்பலில் பயிர் வளர்ப்பனை பார் -
ஏரியில் உள்ள நீரை சேமிக்காத செலவாழி !!
நீ வாழ வைத்த உயிர்கள் உன்னை
வாழ வைக்க சிந்திப்பார்களா??

இரா. வெ.
கோயம்புத்தூர் .

No comments:

Post a Comment