Tuesday, 28 July 2015

கவிச்சாரல்



முதல் கவிதை


எனது பள்ளி ஆசிரியை திருமதி கற்பகம் நான் பத்தாம் வகுப்பு பயிலும் போது  நதியை பற்றி ஒரு கவிதை எழுத சொன்னார் இதோ அது


நதி
துள்ளி வருகையிலே -
    நடனம் நகைக்குதம்மா!
அசைந்து வருகையிலே -  
     இசையும் சிலிர்க்குதம்மா!
இயற்கை அன்னையின் 
     இப்படைப்பினிலே-உள்ளம்மகிழுதம்மா !



சமீபத்திய கவிதை

அறிவைச் சுமக்கும் கருவறை


அறிவைச் சுமக்கும் கருவறை -

எதுவென்ற எனது தேடல் இது !

கடலென கருத்துக்களை  தேக்கி வைத்திருப்பது - நூலகம் ;

வனப்பாக நாம் வளர வசதியைத் தருவதுஇல்லம்;

எண் எழுத்தை கற்பித்து ஆற்றலை வளர்ப்பது - பள்ளிக் கூடம் ;



நூலகம் ,இல்லம்,பள்ளிக் கூடம் கருவறையாகாது ;

உன்னை, உனது ஆற்றலை, அறிவை,

செயல் திறனை செம்மையாக்கி , இந்த நாட்களை ,

பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டிய

பொக்கிசமாக ஆக்குவது இந்த கருவறை!



வெளி உலகில் அடி எடுத்து வைக்கும் முன்

வேண்டிய ஆரோக்கியத்தை உடல்

பலத்தை தருவது தாயின் கருவறை;

வேண்டிய ஆற்றலை ,அறிவை

மனோ பலத்தை தருவது கல்லூரி!!



கருவறையில்  இருக்கும் போது பாதுகாக்கப் படுகிறாய்;

கல்லூரியில் இருக்கும் போது போதிக்கப்படுகிறாய் !

நல்லியபுகளை மட்டும் தானா? மற்றவையும் தான்!!

நல்ல பாடமாக உனக்கு அமையுமே தவிர,

உனை பாதிக்காது- இந்த் பாதுகாப்பு பெட்டகம்!



கனவு காணும் காலங்களில்

கரைந்து கொண்டிருக்கிறது உனது வாழ்க்கை !

கனவு நனவாகும் காலம் . . .

வெகு தொலைவில் இல்லை ,அருகில் தான்

உணவல்ல ஊட்டத்தை பெறுகிறாய் இங்கு !



கல்லூரியில் இருக்கும் வரை உனக்கு

கற்பிக்கப் படுவது அனைத்தையும்

உள்வாங்கிக்கொள் ஆகும் வரை . . .

இல்லையெனில் , இடுக்கண் வரும் போது

துயர் துடைக்க வருபவர் ஒருவரும் இலர் .



அறிவும் பண்பும் கொண்ட ஆசான்களால் ,

அன்பும் தோழமையும் கொண்ட நண்பர்களால் ,

காலத்தை வெல்லும் கருத்துகளை கொண்ட புத்தகங்களால் ,

உலகம் போற்றும் வாலிபனாய் உருவாக்க படுகிறாய்

இந்த அறிவைச் சுமக்கும் கருவறையாகிய கல்லூரியில்!!!

3 comments: