Sunday, 12 June 2016

நட்பிலக்கணம்




I dedicate this article to all BEST FRIENDS as a staff advisor of Tamil Mandram - PSGTECH

"துன்பம் கண்டு
துவண்டு விடாதே
தோழமை உண்டு
மறந்து விடாதே"
இதற்கு எடுத்துக்காட்டாக தமிழ் இலக்கத்தில் இரண்டு உதாரணங்களைப் பார்ப்போம்.
          கோப்பெருஞ்சோழன் சோழப் பேரரசன்.பிசிர் என்னும் ஊரில் வாழ்ந்த ஆந்தையார் ஒரு கவிராயர்கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையாரைப் பற்றி சிறந்த கவிராயர் என அறிந்த இருந்தார்பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழன் மீது நன்மதிப்பு கொண்டிருந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க. பேராவல் கொண்டிருந்தினர்.அக்காலத்தில் அரசன் அரியணை வேண்டாமையால் நாட்டு  நன்மைக்காக ஆதிசிவனுக்காக நோன்பு நோற்று உயிர் துறப்பர்.
கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர்விடத் தயாராகிறார். இதை அறிந்த பிசிராந்தையார் அங்கு வருகிறார். கண்ணீர் மல்க தனது நண்பனை  காண்கிறார். தனது ஆருயிர் நண்பனுடன் ஆனந்மாக இணைகிறார் உயிர் விட!இருவரின் நட்பு உலகம்வியக்க தக்க நட்பு!!

        ஔவையாரும்,அதியமானெடுமானஞ்சியும் விட்டுக்கொடுத்தலுக்கு  இலக்கணம்; அதியமானெடுமானஞ்சி, தனக்கு கிடைத்த அறிய  நெல்லிக்கனியை ஔவையார் நெடுநாள் வாழ விரும்பி அவரிடம் கொடுத்தார்.

        பிசிராந்தையார் தன் வாழ்வின் இறுதியில்தான் காலால் நடந்து வந்து நண்பனை காண்டார். கண்டவுடன் நண்பனின்  நெறிப்படி தானும் உயிர் துறந்தார். இந்தக்காலத்தில் ஒரு குறுந்செய்தி(SMS) அனுப்பி பதில் வரவில்லையெனில் (Goto Hell) நரகத்திற்கு செல் என சபிக்கிறார்கள்.

எங்கே சென்றது நம் பொறுமை????
பொறுத்தார் பூமி ஆழ்வார்
குடும்பத்தில் நாம் வைக்கும் பொறுமையின் பெயர் – “அன்பு”.
கடவுளிடம்  நாம் வைக்கும் பொறுமையின் பெயர் – “நம்பிக்கை”.
நண்பர்களிடம் நாம் வைக்கும் பொறுமையின் பெயர் -  “புரிந்துகொள்ளல்”.
வியக்கத் தக்க இவ்வுலகம்  அதிசயம் நிறைந்தது.அடுத்த நொடி நடப்பதை ஊகிக்க முடியுமே தவிர உணர முடியாது
இன்பத்தை இரட்டிப்பு ஆக்க துன்பத்தை அணுவளவாக்க  நட்பு உதவும்.

நம் வாழ்வில் சிலர் நீங்கா நினைவில் இருப்பார்கள். விட்டுக்கொடுத்து
இருப்பார்கள். உங்களை புரிந்து கொண்டிருப்பார்கள். நிறைய பகிர்ந்திருப்பீர்கள். உணர்ந்து கொண்டால் உன்னதமான நண்பர்கள் உண்மையான பலம். தற்கொலைகளை அதிகரிப்பதைத்தடுக்க தன்னம்பிக்கையை வளர்க்க உறவுகளையும் நட்பையும் மதித்து ஒற்றுமையுடன் வாழலாம். எழுத்து சொல் பொருள் யாப்பு அணி ஆக அகத்தியர் வகுத்த இலக்கணம் ஐந்து. கோப்பெருங்சோழன் பிசிராந்நையார் போல ஔவையார் அதிமானைப்  போல ஆறாம் இலக்கணமாக நாமே நட்பு இலக்கணத்தை உருவாக்குவோம்!!
 

1 comment:

  1. I could “imagine” the deep “friendship” remembrance in school days.
    நண்பர்களிடம் நாம் வைக்கும் பொறுமையின் பெயர் - “புரிந்துகொள்ளல்”.- Semma line.
    Thanks Mam.

    ReplyDelete