Friday, 11 December 2015

சென்னை மழை பாகம்-2



எனது சகோதரன் திரு.நாகராஜன் அவர்கள் விருப்ப படி கடிமான வார்த்தைகளை நீக்கி விட்டு எளிய தமிழில் சென்னை மழை பாகம் 2.


சென்னை மழை  பாகம்-2

முதுவேனில் தொடங்கி முன்பனியிலும்
தொடர்கிறது இச்சென்னை மழை !
கோடையில்  குளிர்ந்த மனம் –
இக்குளிர்  மழையை ரசிக்கவில்லை !

கோடையில் மழையில் நெகிழ்ந்த பூமி - மண்
வாடை தரும் கிருக்கத்தால்  மகிழ்ந்த நெஞ்சம் !
மதராச  பட்டினத்தின் காயத்தால்-
 மாறிய மாயம்;

மழை செய்த மாயத்தில்
மனிதமும் சகோதரத்துவமும்
வெள்ளமாய் எங்கெங்கிலும்! 

கடைக்கோடி தமிழனின் கண்ணீர்
துடைக்க கோடியில் குவிகிறது கொடை !
அமர்ந்த கரையில் இருப்பவன் நனைந்ததால்
அமெரிக்காவில் இருப்பவன் தும்முகிறான்:

அடித்துச் செல்லப்பட்டது- மதம்
அறியப்பட்டது - உண்மையான தியாகம்
கொண்டு வந்தது - சமத்துவம்
கிழிக்கப்பட்டது- அரசியலின் முகம்

வந்தாரை  வாழ்வாங்கு
வாழ வைக்கும் விந்தை சென்னை !!!
சிறுசிறு தவறுகளை திருத்த மருத்ததால்
பொருத்த இயற்கை
பொங்கி அடித்தது தண்ணீரால்!!
உருக்குலைத்து போட்டிருக்கிறது - மழை
உள்கட்டமைப்பு சரியில்லை என்று ??

பாரினில் கப்பலில்
பயிர் வளர்ப்பனை பாரடா-
ஏரியில் உள்ள
நீரை சேமிக்காத மானிடா!

இது சென்னையின் மறுபிறப்பு
இதை வளர்ப்பது உன் பொறுப்பு!!!!!
இரா. வெ.
     

  

Thursday, 10 December 2015

சென்னை மழை




சென்னை மழை

முதுவேனிற்காலம் தொடங்கி முன்பனி காலத்திலும்
முடியாமல் தொடர்கிறது இந்த சென்னை மழை !
கோடை மழையில்  குளிர்ந்த மனது - இந்த
குளிர்  மழையை ரசிக்க மறுக்கிறது !

கோடையில் மழை பெய்தால் குளிரும் பூமி - மண்
வாடை தரும் கிருக்கத்தால்  மகிழும் நெஞ்சம் !
மதராச  பட்டினத்தில் பெய்த மழை - மானுட
இராஜ்ஜியத்தை விழித்தெழ வாய்த்த மாயம்;

மழை செய்த மாயமென்ன
மனித நேயமும், சகோதரத்துவமும்
அங்கிங்கெனாத படி எங்கும் நிறைந்திருக்கிறது
இந்த சிங்கார சென்னையில் !

கடைக்கோடி தமிழனின் கண்ணீர்
துடைக்க கோடியில் குவிகிறது கொடை !
அமர்ந்த கரையில் இருப்பவன் நனைந்ததால்
அமெரிக்காவில் இருப்பவன் வருந்துகிறான்:

வந்தாரை  வையத்துள் வாழ்வாங்கு
வாழ வைக்கும் விந்தையான சென்னை !!!
உன்னை கலைத்து போடிருக்கிறது - மழை
உன் கட்டமைப்பு சரியில்லை என்று ??

பாடம் கற்பித்து அடிப்படையே மாற்றியமைத்து
பட்டம் பூச்சிகளை பறக்க விட முயல்கிறது;
தமிழனது தலை நகரமான உன்
தலைகனத்தை அழித்து விழிக்கச் சொல்கிறது;

பாரினில் கப்பலில் பயிர் வளர்ப்பனை பார் -
ஏரியில் உள்ள நீரை சேமிக்காத செலவாழி !!
நீ வாழ வைத்த உயிர்கள் உன்னை
வாழ வைக்க சிந்திப்பார்களா??

இரா. வெ.
கோயம்புத்தூர் .

Friday, 4 September 2015

TO TEACHERS



ஆசிரியர் தின சிறப்பு கவிதை




அணுவைத்  துளைத்து ஏழ் கடலைப்  புகுத்திய

திருக்குறள் சொல்லும் ; ஒரு பிறப்பில்

கற்ற கல்வி ஏழு பிறப்பிலும்

வந்து உதவுமாம்! இத்தைகைய

அழியா  செல்வமான கல்வியை

அளவில்லாமல் தரும் கொடைவள்ளல்கள் !!



ஆயிரம் கட்டடம் படைப்பான் - கட்டிட நிபுணன்

ஆயிரம் உயிர் காப்பான் - மருத்துவன்

அனைவரையும் பாதுகாப்பவன் - காவலன்

அனைவருக்கும் அறிவமுதை ஊட்டி,

பல்லாயிரம் பல்துறை மனிதர்களை

உருவாக்கும்  உத்தமர்கள் ஆசிரியர்கள் !!



அன்னை   தந்தையை அறியாதவர்

இருக்கிறார்கள் இந்த உலகத்தில் ;

ஆசானை அறியாத மனிதர்

இல்லை இந்த உலகத்தில்!!

அன்னை   தந்தையை விடுத்து -நம்

வளர்ச்சியில் இன்பம் கொல்லும் நலவிரும்பிகள் !!





I am dedicating this poem to my beloved teachers.
Secondary School (Vengai ammaiyar school ,Gobi)
Mrs.Karpagambikai
Mr.Marimuthu
Mr.Mani
Mrs.sarathambal
Higher Secondary School (Palaniyammal School , Gobi)
Mrs..Karpagam
Mrs.kunthavai
Dr.Sampath
Undergraduate (GCE Salem)
Dr.M.Chandra sekaran
Dr. R. S. D. Wahidabnu
Dr I Gnanambal
Dr. R.Annamalai,
Dr.M.Santhi
Post graduate (PSG college of Technology – Coimbatore)
Dr.S.Jayaraman
Dr.S.Subharani
Dr.K.Gunavathi
Dr.P.T.Vanathi
Dr.V.K.Manoharan
Dr.K.Gunaseelan
Dr.Sudhakar
Dr.T.Kesavamurthy
Dr.K.V.Anusuya
Dr.D.Sivaraj
Dr.S.Allinchriste
Dr.L.Thulasimani
Also to
Dr.Arumuganathan
Dr.P.Navaneethan
Dr.S.Rajeev