Friday 11 December 2015

சென்னை மழை பாகம்-2



எனது சகோதரன் திரு.நாகராஜன் அவர்கள் விருப்ப படி கடிமான வார்த்தைகளை நீக்கி விட்டு எளிய தமிழில் சென்னை மழை பாகம் 2.


சென்னை மழை  பாகம்-2

முதுவேனில் தொடங்கி முன்பனியிலும்
தொடர்கிறது இச்சென்னை மழை !
கோடையில்  குளிர்ந்த மனம் –
இக்குளிர்  மழையை ரசிக்கவில்லை !

கோடையில் மழையில் நெகிழ்ந்த பூமி - மண்
வாடை தரும் கிருக்கத்தால்  மகிழ்ந்த நெஞ்சம் !
மதராச  பட்டினத்தின் காயத்தால்-
 மாறிய மாயம்;

மழை செய்த மாயத்தில்
மனிதமும் சகோதரத்துவமும்
வெள்ளமாய் எங்கெங்கிலும்! 

கடைக்கோடி தமிழனின் கண்ணீர்
துடைக்க கோடியில் குவிகிறது கொடை !
அமர்ந்த கரையில் இருப்பவன் நனைந்ததால்
அமெரிக்காவில் இருப்பவன் தும்முகிறான்:

அடித்துச் செல்லப்பட்டது- மதம்
அறியப்பட்டது - உண்மையான தியாகம்
கொண்டு வந்தது - சமத்துவம்
கிழிக்கப்பட்டது- அரசியலின் முகம்

வந்தாரை  வாழ்வாங்கு
வாழ வைக்கும் விந்தை சென்னை !!!
சிறுசிறு தவறுகளை திருத்த மருத்ததால்
பொருத்த இயற்கை
பொங்கி அடித்தது தண்ணீரால்!!
உருக்குலைத்து போட்டிருக்கிறது - மழை
உள்கட்டமைப்பு சரியில்லை என்று ??

பாரினில் கப்பலில்
பயிர் வளர்ப்பனை பாரடா-
ஏரியில் உள்ள
நீரை சேமிக்காத மானிடா!

இது சென்னையின் மறுபிறப்பு
இதை வளர்ப்பது உன் பொறுப்பு!!!!!
இரா. வெ.
     

  

No comments:

Post a Comment