Sunday, 15 April 2018

விளம்பி வருட வாழ்த்து


            விளம்பி வருட வாழ்த்து

உலகைச் சுருக்கி கையில் கொள்ள உவகை கொண்டு
ஒலியையும் ஒளியையும், ஓராயிம் மைல் தொலைவு
அனுப்பி காலத்தை வென்றமானிடா!
அறைக்குள் அமர்ந்து அயர்ந்து போகாதே....
வேனிற் காலத் தென்றலை உணர்ந்து பார்!

பூவிற்கு ஒரு திருநாளாம்- திருவோணம்:
காய் (மா) படைக்க ஒரு திருநாளாம் -யுகாதி:
கனிக்கான திருநாளாம் - சித்திரைத் திருநாள்

உயிர் வளர்க்கும் திருமூலர் மந்திரம் 
பழங்களின் மருத்துவப் பயன்களாம்
இதை அறிய வாராய் இளந்தளிரே!

மல்கோவா, பங்கனபல்லி, ருமானி
,பச்சை, நீலம், செந்தூரம் மாங்கனி உண்டு
வைட்டமின் A. உயிர்ச்சத்து பெறுவாய் நீ !!
மிக அதிசய நறுமணம், மிக அதிக
வைட்டமின் C உயிர்ச்சத்து கொண்ட கனி கொய்யா
பப்பாளியை  சாப்பிட்டால்
பயப்படத் தேவையில்லை எப்பிணிக்கும்
கிருமிகளை அழித்து உடலைப் பலப்படுத்த
கிடைக்கும் வருடம் முழுதும் இக்கனி!!

பித்தம் போக்க -அன்னாசி
மனக்கவலை மறைய -விளாம்பழம்
பலம் வேண்டுமா? பலாப்பழம்
வறட்டு இறுமலா? மாதுளை

சுக நித்திரைக்கு ஆரஞ்சு 
நீர்க்கடுப்புக்கு நாவல்பழம்
மலச்சிக்கலுக்கு முலாம்பழம்
தகதக மேனிக்கு தக்காளி
தாகம் தணிக்க தர்பூசணி

புது இரத்தம் பெற பேரீச்சை
இருதயம் பலப்பட உலர்திராட்சை
நல்ல பசிக்கு திராட்சைப்பழம்
பசியை மந்தப்படுத்த சீத்தாப்பழம்
வயொற்றுப்புண் வாய்ப்புண் ஆற வில்வப்பழம்
உடல் உஷ்னம் தீர வெள்ளரிப்பழம்

வாழைக்கனியின் அருமை கேளீரோ
சந்தான விருத்திக்கு செவ்வாழை
அஜீரணத்துக்கு இரஸ்தாளி
கணையச்சூடு தடுக்க பேயன்
உடல் உஷ்ணம் போக்க பச்சை நாடன்
மலச்சிக்கல் போக்க பூவன் பழம்

கனியைக் கனிந்து உண்டு
மகிழ்ந்து வாழ்வாய் நீடூழி
இந்திருமந்திரத்தைப் பகிர்கிறேன்
விளம்பி வருட வாழ்த்தாக!!!
நீங்களும் பகிருங்கள் 
உங்கள் நண்பர் நலம் வாழ

இரா.வெ.
கோயம்புத்தூர் .