ஓர் ஆசிரியராய் -----------
ஒரு வருடத்தில் அனைவரிடமும் இருந்து
எல்லாருக்கும் ஒரு முறை தான் வாழ்த்து;
ஆசிரியர்களுக்கு மட்டும் இருமுறை -
பிறந்தநாள் மற்றும் ஆசிரியர் தினம்
இருமுறைப் பிறப்பதைப் போன்ற இன்பத்தைத் தரும் இனிய பொறுப்பு!
மாணவர்கள் சிலிர்க்க வைக்கிறார்கள்
உயர்ந்த இடத்தை அடைந்த பின்பும்
உன்னதமான ஆசிரியர்களை மறவாமை காரணமாய்
உயர்கிறார்கள் மேன்மேலூம்.
செய்யும் தொழிலே தெய்வம் -
மாதா, பிதா, குரு தெய்வமென
செய்யும் தொழிலால் தெய்வத்திற்கும் மேலாகப் போற்றப்படுகிறோம்
இந்த இணையதள உலகத்தில் ஏகலைவன்களே அதிகம்:
இருந்தும் பல அர்ஜூனர்களை நேரடியாய் உருவாக்குவதில் மகிழ்ச்சி!!
உலகம் உள்ளவரை உருவாக்குபவர்களான ஆசிரியர்கள் இருப்பார்கள்
உயிர் உள்ளவரை இவ்வறப்பணியை
செய்ய ஆசை - ஓர் ஆசிரியராய்.......
நல்லாசிரியர் கலாம் போல!!
---------------இரா.வெ.